Home » உலகச் செய்திகள் » செல்பி மோகத்தில் உயிரை பலிக்கொடுத்த வீராங்கனை

செல்பி மோகத்தில் உயிரை பலிக்கொடுத்த வீராங்கனை

தைவானை சேர்ந்த மலையேறும் வீராங்கனை ஜிஜிவூ. இவர் மலைச்சி கரங்களில் நீச்சல் உடையில் ஏறி அதை செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டு வந்தார்.

👤 Sivasankaran23 Jan 2019 5:38 PM GMT
செல்பி மோகத்தில் உயிரை பலிக்கொடுத்த வீராங்கனை
Share Post

தைவானை சேர்ந்த மலையேறும் வீராங்கனை ஜிஜிவூ. இவர் மலைச்சி கரங்களில் நீச்சல் உடையில் ஏறி அதை செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டு வந்தார். இதனால் பிரபலமாக திகழ்ந்தார்.

தைவானில் உள்ள யுஷான் தேசிய பூங்கா பகுதியில் உள்ள மலை சிகரத்தில் ஏறி 'பிகினி' நீச்சல் உடையில் எடுத்த செல்பியை வெளியிட்டார். அப்போது கால் தவறி மலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விட்டார்.

பலத்த காயம் அடைந்த அவர் அதை சேட்லைட் போன் மூலம் தனது ஆதரவாளர்களுக்கு தெரிவித்தார். அவரை மீட்க ஹெலிகாப்டர்கள் விரைந்தன. இருந்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் பரிதாபமாக இறந்தார்.

செல்பி மோகம் உயிரையே பலி வாங்கி விட்டது.