Home » உலகச் செய்திகள் » மக்களுக்கு தோட்டங்கள் பிரித்து வழங்கப்பட வேண்டும்

மக்களுக்கு தோட்டங்கள் பிரித்து வழங்கப்பட வேண்டும்

இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை...

👤 Sivasankaran24 Jan 2019 5:17 PM GMT
மக்களுக்கு தோட்டங்கள் பிரித்து வழங்கப்பட வேண்டும்
Share Post

இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இன்று(வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் இராதாகிருஷ்ணன் சிறுதோட்ட தொழிலாளர்களுக்கு போன்று பெருந்தோட்ட மக்களுக்கும் தோட்டங்கள் பிரித்துக்கொடுக்கப்படவேண்டும் என்றார்.

"பெருந்தோட்ட மக்களின் சம்பளப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கவேண்டும்.

ஆயிரம் ரூபா வழங்க முடியுமாக இருந்தால் சந்தோஷம். என்றாலும் நியாயமான சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

அதேபோன்று சிறுதோட்ட மக்களுக்கு அந்த தோட்டங்களில் சுயாதீனமாக செயற்பட முடியுமாக இருக்கின்றபோதும் பெருந்தோட்ட மக்களுக்கு அந்த உரிமை இல்லை.

அதனால் சிறுதோட்ட மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தை பெருந்தோட்ட மக்களுக்கும் வழங்குவதுடன் தேயிலை தோட்டங்கள் பெருந்தோட்ட மக்களுக்கும் பிரித்து வழங்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

அத்துடன் கம்பனிகள் பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை 625 ரூபாவாக வழங்க ஒத்துக்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. இது போதுமானதாக இல்லை" என இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.