Home » உலகச் செய்திகள் » அமெரிக்காவில் உள்ள தூதரகத்தை மூட வெனிசுலா அதிபர் உத்தரவு

அமெரிக்காவில் உள்ள தூதரகத்தை மூட வெனிசுலா அதிபர் உத்தரவு

வெனிசுலாவில் பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக நேற்று பிரகடனம் செய்தார்.

👤 Sivasankaran25 Jan 2019 4:04 PM GMT
அமெரிக்காவில் உள்ள தூதரகத்தை மூட வெனிசுலா அதிபர் உத்தரவு
Share Post

வெனிசுலாவில் பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக நேற்று பிரகடனம் செய்தார்.அவருக்கு அமெரிக்கா, கனடா, அர்ஜெண்டினா, பிரேசில், சிலி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

குறிப்பாக, ஜூவான் கெய்டோவை அதிகாரப்பூர்வமான வெனிசுலா அதிபர் என்று அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நிகோலஸ் மடுரோ உடனடியாக பதவி விலகவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஆனால், எனது பதவிக்காலம் 2025-ம் ஆண்டுவரை உள்ளது. அதற்குள் நான் பதவியை விட்டு இறங்க மாட்டேன் என நிகோலஸ் மடுரோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மடுரோவுக்கு ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தனக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள ஜூவான் கெய்டோவுக்கு அமெரிக்கா அளித்துவரும் ஆதரவை கண்டு நிகோலஸ் மடுரோ ஆத்திரமடைந்துள்ளார். இதன்விளைவாக, வெனிசுலா நாட்டில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் இன்னும் 72 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என நேற்று உத்தரவிடப்பட்டது.

இதேபோல், அமெரிக்காவில் உள்ள வெனிசுலா தூதரகத்தை மூடுமாறு நிகோலஸ் மடுரோ இன்று உத்தரவிட்டுள்ளார். இதனால், வெனிசுலா-அமெரிக்கா இடையிலான விரிசல் மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.