Home » உலகச் செய்திகள் » ரொறொன்ரோ மக்களுக்கு சுற்றுச்சூழல் திணைக்களத்தின் எச்சரிக்கை

ரொறொன்ரோ மக்களுக்கு சுற்றுச்சூழல் திணைக்களத்தின் எச்சரிக்கை

கனடாவின் ரொறொன்ரோவில் எதிர்வரும் சில தினங்களுக்கு கடும் குளிரான காலநிலை நிலவும் என்பதுடன், உறைபனி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran25 Jan 2019 4:18 PM GMT
ரொறொன்ரோ மக்களுக்கு சுற்றுச்சூழல் திணைக்களத்தின் எச்சரிக்கை
Share Post

கனடாவின் ரொறொன்ரோவில் எதிர்வரும் சில தினங்களுக்கு கடும் குளிரான காலநிலை நிலவும் என்பதுடன், உறைபனி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தினால் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பகல் வேளைகளில் 2 பாகை செல்சியசாக காணப்படும் வெப்பநிலை, இரவு நேரங்களில் -9 செல்சியசாகக் குறைந்து காணப்படும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. சுமார் 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் -23 செல்சியஸ் குளிர் காற்று வீசும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மாலை அல்லது இரவு வேளையில் உறைபனி மழையுடன் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.