Home » உலகச் செய்திகள் » யூத தம்பதிகளை விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டதற்கான காரணம் என்ன?

யூத தம்பதிகளை விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டதற்கான காரணம் என்ன?

அமெரிக்காவில் மிச்சிகனில் உள்ள சவுத் பீல்டு பகுதியைச் சேர்ந்தவர் யோச்சி அட்லர்.

👤 Sivasankaran26 Jan 2019 3:26 PM GMT
யூத தம்பதிகளை விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டதற்கான காரணம் என்ன?
Share Post

அமெரிக்காவில் மிச்சிகனில் உள்ள சவுத் பீல்டு பகுதியைச் சேர்ந்தவர் யோச்சி அட்லர் (வயது 37). இவரது மனைவி ஜென்னி (வயது 31). யூத தம்பதியரான இவர்கள் விடுமுறையை கழிக்க மியாமிக்கு தனது 19 மாத பெண் குழந்தையுடன் வந்திருந்தனர்.

கடந்த 23ம் திகதி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் டெட்ராய்டு நகருக்கு புறப்பட்டனர். விமானத்தில் ஏறி இவர்கள் அமர்ந்து இருந்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் 3 பேரும் கட்டாயப்படுத்தி விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அட்லரின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக சக பயணிகளும், ஊழியர்களும் புகார் தெரிவித்ததாகவும் அதனால் அவர்கள் இறக்கி விடப்பட்டதாகவும் விமான நிர்வாகம் கூறியது.

ஆனால் இன விரோதம் காரணமாக தாங்கள் கீழே இறக்கி விடப்பட்டதாக அட்லர் தெரிவித்தார். எது உண்மை என்று சரிவர தெரியவில்லை.