Home » உலகச் செய்திகள் » புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை

புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை

புதிய அரசியல் யாப்பை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை என எதிர்க் ...

👤 Sivasankaran26 Jan 2019 3:50 PM GMT
புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை
Share Post

புதிய அரசியல் யாப்பை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாராஹென்பிட்டிய, அபேராம விகாரையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற சமய நிகழ்விற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

"மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் செயற்பட வேண்டியது அவசியம். வாக்குறுதிகளை நிறைவேற்றாது நாட்டைத் துண்டுகளாக பிரித்து காட்டிக் கொடுப்பதற்கு முற்படும் சந்தர்ப்பத்தில் மக்கள் முழுமையாக அதற்கு எதிராக இருப்பார்கள்.

ஆகவே தற்போதைய நிலையில் புதிய அரசியலமைப்பை சமர்பிக்க முடியாது. அவ்வாறு சமர்பித்தாலும் அவர்களால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறமுடியாது. தற்போது அரசாங்கத்தில் உள்ள சிலர் இதனை அரசியல் அமைப்பு என்று கூறும் போது சிலர் இதனை சட்ட மூலம் என அர்த்தப்படுத்துகின்றனர்" என்றும் தெரிவித்தார்.