Home » உலகச் செய்திகள் » விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு கோமகன் பிலிப் மன்னிப்புக் கடிதம்

விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு கோமகன் பிலிப் மன்னிப்புக் கடிதம்

சன்ரிங்காம் பகுதியில் கடந்த 17ஆம் திகதி கோமகன் பிலிப் பயணித்த கார், எதிரே வந்த மற்றுமொரு காருடன்...

👤 Sivasankaran27 Jan 2019 5:10 PM GMT
விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு கோமகன் பிலிப் மன்னிப்புக் கடிதம்
Share Post

சன்ரிங்காம் பகுதியில் கடந்த 17ஆம் திகதி கோமகன் பிலிப் பயணித்த கார், எதிரே வந்த மற்றுமொரு காருடன் மோதி விபத்திற்குள்ளானது. இதில், எதிரே வந்த காரை செலுத்திய பெண் சிறிது காயங்களுக்கு உள்ளானர். காரிலிருந்த அவரது 9 வயது குழந்தை உயிர் தப்பியது. எனினும், 46 வயதான அவருடைய தாய் மணிக்கட்டு உடைந்த நிலைக்கு ஆளானார்.

விபத்தில் காயமடைந்த பெண்ணிடம், கோமகன் பிலிப் மன்னிப்புக் கோரியும், காயமடைந்த பெண் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறி கடிதம் அனுப்பியுள்ளார்.

கடிதத்தை பெற்ற அந்த பெண்மணி, மிகவும் உணர்வுபூர்வமான அனுபவம் எனக் கூறியுள்ளார்.