Home » உலகச் செய்திகள் » எரிவாயு பிரச்சினையால் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து

எரிவாயு பிரச்சினையால் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து

நெதர்லாந்தின் ஹேக் (Hague) நகரில் உள்ள மூன்றுமாடிக் குடியிருப்பு கட்டிடமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச்சம்பவத்தில் ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்.

👤 Sivasankaran28 Jan 2019 5:12 PM GMT
எரிவாயு பிரச்சினையால் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து
Share Post

நெதர்லாந்தின் ஹேக் (Hague) நகரில் உள்ள மூன்றுமாடிக் குடியிருப்பு கட்டிடமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச்சம்பவத்தில் ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்.

எரிவாயு கசிவை தொடர்ந்து இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. அதில் குடியிருப்புக் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாக தீயணைப்பு அதிகாரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக உள்ளூர் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளார். அவரை உயிருடன் மீட்பதற்கு பணியாளர்கள் போராடி வருகின்றனர். ஆனால், கட்டிடத்தின் உறுதியற்றதன்மை காரணமாக மீட்புப்பணிகளில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.