Home » உலகச் செய்திகள் » சீனாவில் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கனடியர் கைது

சீனாவில் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கனடியர் கைது

சீனாவில் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, கனடியர் ஒருவர் மக்காவ்வில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

👤 Sivasankaran28 Jan 2019 5:36 PM GMT
சீனாவில் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கனடியர் கைது
Share Post

சீனாவில் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, கனடியர் ஒருவர் மக்காவ்வில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

61 வயதுடைய கனடியப் பிரஜை பெயரிடப்படாத ஒரு பொழுதுபோக்கு நிறுவனத்திடம் இருந்து, 375 மில்லியன் கனடிய டொலரை ஏமாற்ற முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் அந்நிறுவனத்தின் கணக்கில் இருந்து ஹாங்காங்கில் உள்ள ஒரு கணக்கிற்கு பணத்தை மாற்றுவதற்காக போலி ஆவணங்களை பயன்படுத்த முயற்சித்ததாக கூறப்படுகிறது.

கைதுசெய்யப்பட்டவரின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை. அத்தோடு இதுகுறித்து கனடாவின் சர்வதேச விவகாரத் துறையினரும் எவ்வித தகவல்களையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.