Home » உலகச் செய்திகள் » லிபரல் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டால், கனடியர்கள் அதிக வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்

லிபரல் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டால், கனடியர்கள் அதிக வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்

வரும் தேர்தலில் மீண்டும் லிபரல் அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டால், கனடியர்கள் அதிக வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என கன்ர்வேட்டிவ் தலைவர் அண்ட்ரூ ஷெர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

👤 Sivasankaran28 Jan 2019 5:40 PM GMT
லிபரல் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டால், கனடியர்கள் அதிக வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்
Share Post

வரும் தேர்தலில் மீண்டும் லிபரல் அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டால், கனடியர்கள் அதிக வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என கன்ர்வேட்டிவ் தலைவர் அண்ட்ரூ ஷெர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இது குறித்து விவாதிக்க கன்ர்வேட்டிவ் கட்சியின் தலைவர் தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும், புதிய வேட்பாளர்களுடனும் மூன்று நாள் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்தார்.

இது குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவித்த அவர், லிபரல் அரசாங்கத்தின் குறைபாடுகள் தொடர்பாக பட்டியலைக் குறிப்பிட்டு, அதில் குறிப்பாக நிதிப் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டினார்.

இந்த வார இறுதியில் இடம்பெற்ற விடயங்களைச் சுட்டிக்காட்டிய அவர், ஜஸ்டின் ரூடோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், வரி அதிகரிக்கும் எனவும் கூறினார்.

அத்தோடு அவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு மேலதிகமாக வழங்கப்பட்டால், எரிபொருள், உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு குறித்த ஆண்டுகளில் மேலும் வரி அதிகம் செலுத்த வேண்டிய நிலை அவசியம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.