Home » உலகச் செய்திகள் » பாகிஸ்தானின் முதல் பெண் நீதிபதி பதவியேற்பு

பாகிஸ்தானின் முதல் பெண் நீதிபதி பதவியேற்பு

பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் இரண்டு சதவீதம் உள்ளனர்.

👤 Sivasankaran29 Jan 2019 6:02 PM GMT
பாகிஸ்தானின் முதல் பெண் நீதிபதி பதவியேற்பு
Share Post

பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் இரண்டு சதவீதம் உள்ளனர். இஸ்லாமியர்களுக்கு அடுத்தப்படியாக இந்துக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். சிறுபான்மையினராக உள்ள இந்து சமயத்தை சேர்ந்த பெண் ஒருவர் முதல் முறையாக நீதிபதியாகியுள்ளார்.

காம்பார்-ஷாக்தாத்கோட்டை சேர்ந்த சுமன் குமாரி பெண் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய சொந்த மாவட்டத்திலேயே பணியாற்ற உள்ளார். பாகிஸ்தானின் ஐதராபாத்தில் எல்.எல்.பி.யை முடித்துள்ளார். பின்னர் தன்னுடைய சட்ட மேற்படிப்பை கராச்சியில் உள்ள சுஷாபிஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார்.

சுமன் குமாரியின் தந்தை பவன்குமார் பேசுகையில், என்னுடைய மகள் பாகிஸ்தானில் உள்ள ஏழை மக்களுக்கு சட்ட உதவியை வழங்க உதவிகளை செய்வார். அவர், மிகவும் சவாலான தொழிலை தன்னுடைய கையில் எடுத்துள்ளார். அதில் கடினமான உழைப்பு மற்றும் நேர்மையினால் மேலும், மேலும் உயர்வார் என்று கூறினார்.