Home » உலகச் செய்திகள் » அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்பில் இருந்து அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் நேற்று (ஜனவரி, 28)...

👤 Sivasankaran29 Jan 2019 6:07 PM GMT
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
Share Post

இலங்கை கடற்பரப்பில் இருந்து அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் நேற்று (ஜனவரி, 28) மாலை காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்து இன்று யாழ். நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

நெடுந்தீவு பெரும் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது இவர்கள் கைது செய்யப்பப்பட்டுள்ளனர். இந்த மீனவர்கள் ராமேஸ்வரத்தினை சேர்ந்தவர்கள்.

இன்றைய தினம் யாழ் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன் முன்னிலையில் ஆஜராக்கப்பட்ட போது இவர்களை எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.