Home » உலகச் செய்திகள் » சோமாலியாவில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல்

சோமாலியாவில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல்

அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கி வரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

👤 Sivasankaran29 Jan 2019 6:11 PM GMT
சோமாலியாவில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல்
Share Post

அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கி வரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

சோமாலியா தலைநகரம் மொகடிஷுவில் உள்ள பனாதிர் பகுதியில் இன்று பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 5-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலதிக விவரம் எதுவும் இன்னும் தெரியவில்லை.