Home » உலகச் செய்திகள் » குளிரால் அவதிப்படும் மக்களுக்கு அடைக்கலம் வழங்கும் நிலையம

குளிரால் அவதிப்படும் மக்களுக்கு அடைக்கலம் வழங்கும் நிலையம

சட்பெர்ரியில் கடுமையான வெப்பநிலை நிலவுவதால், பெரும்பாலான மக்கள் இரவு வேளைகளில் டிம்மின்ஸ் Native...

👤 Sivasankaran2 Feb 2019 6:49 PM GMT
குளிரால் அவதிப்படும் மக்களுக்கு அடைக்கலம் வழங்கும் நிலையம
Share Post

சட்பெர்ரியில் கடுமையான வெப்பநிலை நிலவுவதால், பெரும்பாலான மக்கள் இரவு வேளைகளில் டிம்மின்ஸ் Native Friendship நிலையத்தை நாடுவதாக தெரிய வந்துள்ளது.

அத்தோடு, இங்கு தற்போது உடற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளதால், தினந்தோறும் இரவு வேளையில் 70க்கும் மேற்பட்டோர் இங்கு பயிற்சிகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இங்கு குளிக்கும் வசதிகள், சமூக தொழிலாளர்களுக்கான அணுகல், புத்துணர்ச்சி நடவடிக்கைகள் என பல வசதிகள் உண்டு.

இதேவேளை, வடக்கு ஒன்றாரியோவின் பெரும்பகுதியில் கடுமையான குளிர் நிலவுவதால், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கனடிய வானியல் மையம் தெரிவித்துள்ளது.