Home » உலகச் செய்திகள் » அதிவேகமாக பாயக்கூடிய ஏவுகணையை பரிசோதித்தது ஈரான்

அதிவேகமாக பாயக்கூடிய ஏவுகணையை பரிசோதித்தது ஈரான்

எதிரி நாடான இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் வகையில் அதிக தூரம் செல்லும் ஏவுகணைகளை...

👤 Sivasankaran2 Feb 2019 6:58 PM GMT
அதிவேகமாக பாயக்கூடிய ஏவுகணையை பரிசோதித்தது ஈரான்
Share Post

எதிரி நாடான இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் வகையில் அதிக தூரம் செல்லும் ஏவுகணைகளை ஈரான் உருவாக்கி வருகிறது.

அவ்வகையில், 1350 கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்துச் சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதித்ததாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

'ஹோவைஸே' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை 1200 கிலோ மீட்டர் தூரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக ஈரான் நாட்டு ராணுவ மந்திரி அமிர் ஹட்டாமி தெரிவித்தார். தாழ்வாகவும் பறந்து சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணையை மிக குறைவான நேரத்தில் தாக்குதலுக்கு தயார் படுத்தி விடலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.