Home » உலகச் செய்திகள் » அரச குடும்பத்தை லண்டனில் இருந்து வெளியேற்ற இரகசிய திட்டம்?

அரச குடும்பத்தை லண்டனில் இருந்து வெளியேற்ற இரகசிய திட்டம்?

பிரக்ஸிற் தொடர்பான தீர்மானம் தோல்வியடைந்து போராட்டம் வெடித்தால் மகாராணி இரண்டாம் எலிசபேத் மற்றும் அவரது குடும்பத்தினரை லண்டனிலிருந்து வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

👤 Sivasankaran3 Feb 2019 4:01 PM GMT
அரச குடும்பத்தை லண்டனில் இருந்து வெளியேற்ற இரகசிய திட்டம்?
Share Post

பிரக்ஸிற் தொடர்பான தீர்மானம் தோல்வியடைந்து போராட்டம் வெடித்தால் மகாராணி இரண்டாம் எலிசபேத் மற்றும் அவரது குடும்பத்தினரை லண்டனிலிருந்து வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றம் எடுத்த முடிவு குறித்து கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகளவானவர்கள் வாக்களித்திருந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான காலக்கெடுவான 29-3-2019 என்ற திகதி நெருங்கி வருவதால் பிரித்தானிய பிரதமர் தெரசா மே தயாரித்த செயல்திட்டத்தின் மீது அதிருப்தி அடைந்த சில அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த எதிர்ப்பு, போராட்டமாக உருவெடுக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அப்படி ஒரு போராட்டம் வெடித்தால் லண்டனிலுள்ள பக்கிங்காம் அரண்மனையில் வசித்துவரும் மகாராணி இரண்டாம் எலிசபேத் மற்றும் அவரது குடும்பத்தினரை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுசெல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பனிப்போர் காலத்திலும், பிரித்தானியா மீது சோவியத் யூனியன் (ரஷ்யா) அணு ஆயுத தாக்குதல் நடத்தலாம் என அச்சம் வெளியிடப்பட்ட நிலையில், பிரித்தானிய அரசக் குடும்பத்தினர் இதுபோன் அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட்டு, லண்டன் நகருக்கு வெளியே பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.