Home » உலகச் செய்திகள் » யாழில் சுதந்திர தினத்திற்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம்

யாழில் சுதந்திர தினத்திற்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம்

இலங்கை நாட்டின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் ஒன்று யாழில் முன்னெடுக்கப்படவுள்ளது.

👤 Sivasankaran3 Feb 2019 4:21 PM GMT
யாழில் சுதந்திர தினத்திற்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம்
Share Post

இலங்கை நாட்டின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் ஒன்று யாழில் முன்னெடுக்கப்படவுள்ளது.

சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற உள்ளது.

"போலி சுதந்திர தினம் எமக்கு வேண்டாம்" என்ற பொருளில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சம உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் யூட் தெரிவித்துள்ளார்.