Home » உலகச் செய்திகள் » கனடாவின் மத்திய கணக்காளர் நாயகம் காலமானார்

கனடாவின் மத்திய கணக்காளர் நாயகம் காலமானார்

கனடாவின் மத்திய கணக்காளர் நாயகம் மிச்செல் பேர்குசன் தனது 60 ஆவது வயதில் காலமானார். புற்றுநோயால்...

👤 Sivasankaran3 Feb 2019 4:33 PM GMT
கனடாவின் மத்திய கணக்காளர் நாயகம் காலமானார்
Share Post

கனடாவின் மத்திய கணக்காளர் நாயகம் மிச்செல் பேர்குசன் தனது 60 ஆவது வயதில் காலமானார். புற்றுநோயால் அவதியுற்ற அவர் நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் நியூ பிரவுன்ஸ்விக்கின் கணக்காளர் நாயகமாக கடமையாற்றி வந்த அவர், கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து மத்திய கணக்காளார் நாயகமாக பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து புற்றுநோக்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிகிக்சைகள் பலனளிக்காத நிலையில், ஒட்டாவாவில் அவர்களது குடும்பத்தார் மத்தியில் அவர் உயிரிழந்து விட்டதாகவும் அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.