Home » உலகச் செய்திகள் » மிருகவதை வழக்கில் மூன்றாவது நபர் மீது குற்றச்சாட்டு

மிருகவதை வழக்கில் மூன்றாவது நபர் மீது குற்றச்சாட்டு

எட்மன்டனில் மிருகவதை வழக்கு தொடர்பாக, 3 ஆவது நபர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு...

👤 Sivasankaran5 Feb 2019 3:58 PM GMT
மிருகவதை வழக்கில் மூன்றாவது நபர் மீது குற்றச்சாட்டு
Share Post

எட்மன்டனில் மிருகவதை வழக்கு தொடர்பாக, 3 ஆவது நபர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அல்பேர்ட்டாவின் விலங்குகளுக்கு கொடுமைப்படுத்தலை தடுக்கும் சங்கத்தால், ராபர்ட் ஹக் கார்னெல் என்ற 60 வயதுடைய நபர் மீது இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மிருகம் காயமடைய வைத்தமை, உணவு மற்றும் தண்ணீர் வழங்க தவறியமை மற்றும் ஒரு விலங்கு காயமடைந்தாலோ அல்லது நோய்வாய்ப்பட்டாலோ போதுமான சிகிச்சையை அளிக்க தவறியது போன்ற 9 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கு முகம் கொடுத்துள்ள குறித்த நபர் எதிர்வரும் மார்ச் 11 ம் திகதி ஈவன்ஸ்பேர்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.