Home » உலகச் செய்திகள் » முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் போல் டிவார் காலமானார்

முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் போல் டிவார் காலமானார்

கனடாவின் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினராக விளங்கிய போல் டிவார் புற்றுநோய் காரணமாக தனது 56 ஆவது வயதில் காலமானார்.

👤 Sivasankaran7 Feb 2019 5:53 PM GMT
முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் போல் டிவார் காலமானார்
Share Post

கனடாவின் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினராக விளங்கிய போல் டிவார் புற்றுநோய் காரணமாக தனது 56 ஆவது வயதில் காலமானார்.

ஆசிரியாராகவும், தொழிற்சங்கத் தலைவராகவும் இருந்த அவர், மூளை புற்றுநோயால் கடந்த ஒரு ஆண்டு காலமாக அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) உயிரிழந்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் மூளை புற்றுநோய் ஏற்படவே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரின் உடல்நிலை தேறி வந்தது. இந்நிலையில் அவரது துணைவியார் மற்றும் இரண்டு மகன்மார் மத்தியில், வீட்டில் அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.

2006ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு வரையில் ஒட்டாவா மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய அவர் , 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தனது நாடாளுமன்ற ஆசனத்தை இழந்திருந்தார்.

இதனை அடுத்து தொடர்ந்து உலக அமைதி, வன்முறை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்ததுடன், வெளியுறவு விமர்சகராகவும் பெரிதும் பேசப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.