Home » உலகச் செய்திகள் » ஐரிஷ் பிரதமரை சந்திக்க பிரித்தானிய பிரதமர் டப்ளின் விஜயம்

ஐரிஷ் பிரதமரை சந்திக்க பிரித்தானிய பிரதமர் டப்ளின் விஜயம்

ஐரிஷ் எல்லை பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்குடன் ஐரிஷ் பிரதமர் லியோ வராத்கருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இன்று டப்ளின் பயணம் செய்வாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran8 Feb 2019 5:27 PM GMT
ஐரிஷ் பிரதமரை சந்திக்க பிரித்தானிய பிரதமர் டப்ளின் விஜயம்
Share Post

ஐரிஷ் எல்லை பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்குடன் ஐரிஷ் பிரதமர் லியோ வராத்கருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இன்று டப்ளின் பயணம் செய்வாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் தெரேசா மே நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்றை எட்டுவதற்கு தடையாக செயற்படும் ஐரிஷ் எல்லை பிரச்சினைக்குத் தீர்வொன்றை காண்பதே ஐரிஷ் பிரதமருடனான மே-யின் சந்திப்பின் இலக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே-யுடனான சந்திப்புக்கு முன்னதாக பெல்பாஸ்ட் பயணிக்கும் ஐரிஷ் பிரதமர் அங்கு வட அயர்லாந்தின் பிரதான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற ஐரோப்பிய ஆணையத் தலைவருடனான மே-யின் சந்திப்பது தொடர்ந்து பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் சம்மதம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.