Home » உலகச் செய்திகள் » மொரான்டி மேம்பாலத்தை அகற்றும் பணிகள் தொடங்கின

மொரான்டி மேம்பாலத்தை அகற்றும் பணிகள் தொடங்கின

இத்தாலியில் சுமார் 43 பேரின் மரணத்திற்கு காரணமான ஜெனோவாவில் உள்ள மொரான்டி மேம்பாலத்தை அகற்றும் பணிகள் தற்போது துரித கதியில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran8 Feb 2019 5:30 PM GMT
மொரான்டி மேம்பாலத்தை அகற்றும் பணிகள் தொடங்கின
Share Post

இத்தாலியில் சுமார் 43 பேரின் மரணத்திற்கு காரணமான ஜெனோவாவில் உள்ள மொரான்டி மேம்பாலத்தை அகற்றும் பணிகள் தற்போது துரித கதியில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பாரிய இயந்திராதிகள் கொண்டு வரப்பட்டு பாலத்தில் எஞ்சிய பகுதிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இரண்டு பாரிய பாரம் தூக்கிகளின் உதவியுடன் பாலத்தின் பெரும்பாகங்கள் அகற்றப்பட்டுகின்றன. 7 ஆம் 8 ஆம் தொகுதிகளின் 48 மீட்டர் தொகுதிகள் சுமார் 900 டன் எடை கொண்டவைகளாக இருக்கின்றன.

அவற்றை அகற்றுவதற்கு குறைந்தது 6 தொடக்கம் 8 மணித்தியாலங்கள் தேவைப்படும் என்று பொறியியலாளர் தெரிவித்துள்ளனர்.

இத்தாலிய பிரதமர் குய்செப்பே கொண்டே இன்று மேம்பாலம் அகற்றப்படும் வளாகத்திற்கு சென்று நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளார்.