Home » உலகச் செய்திகள் » தனது இறப்பிற்கு முன்னரே மரண அறிவித்தலை எழுதி வெளியிட்ட பெண்மணி

தனது இறப்பிற்கு முன்னரே மரண அறிவித்தலை எழுதி வெளியிட்ட பெண்மணி

ஒன்ராறியோவை சேர்ந்த ஒரு பெண்மணி தனது மரண அறிவித்தலை தானே எழுதியிருப்பது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு ...

👤 Sivasankaran8 Feb 2019 5:38 PM GMT
தனது இறப்பிற்கு முன்னரே மரண அறிவித்தலை எழுதி வெளியிட்ட பெண்மணி
Share Post

ஒன்ராறியோவை சேர்ந்த ஒரு பெண்மணி தனது மரண அறிவித்தலை தானே எழுதியிருப்பது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் விடயமாக இருக்கிறது.

சைபால் மேரி ஹிக்ஸ் 82ஆவது வயதில் இம்மாதம் 2ஆம் திகதி இறந்தார். குறித்த தினத்திலேயே அவரது மரண அறிவித்தல் வெளியானது.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "எனது மூத்த மகள் பிரெண்டா அருகில் இருக்க, 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி காலை 8.20 மணியளவில் எனது உயிர் அமைதியாக பிரிந்தது.

ஒப்புக் கொள்வதற்கு கஷ்டமாக தான் இருக்கிறது, ஆனால் என்ன செய்வது, நான் இறந்து போனேன்" என்று தொடங்கும் வித்தியாசமான அந்த மரண அறிவித்தல் தற்போது பெரிதாக பேசப்பட்டு வருகின்றது. அந்த அறிவித்தலில் தனது குடும்பத்தாருக்கும் முக்கியமாக பேரக்குழந்தைகளுக்கும் தனித்தனியே தனது அன்பை சைபால் மேரி ஹிக்ஸ் தெரிவித்துள்ளார்.

இறந்தும் தன் நகைச்சுவை உணர்வால் தன் குடும்பத்தாரை சிரிக்க வைத்த சைபால் மேரி ஹிக்ஸ்ஸின் மரண அறிவித்தல் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.