Home » உலகச் செய்திகள் » உடன்பாடற்ற பிரெக்‌ஸிற் விளைவால் சீபோர்ன் சரக்கு கப்பல் ஒப்பந்தம் ரத்து

உடன்பாடற்ற பிரெக்‌ஸிற் விளைவால் சீபோர்ன் சரக்கு கப்பல் ஒப்பந்தம் ரத்து

உடன்பாடற்ற பிரெக்ஸிட்டின் பகுதியாக சர்ச்சைக்குரிய படகு ஒப்பந்தம் ஒன்று எந்த ஒப்பந்தமும் இல்லாத ஒரு...

👤 Sivasankaran9 Feb 2019 6:01 PM GMT
உடன்பாடற்ற பிரெக்‌ஸிற் விளைவால் சீபோர்ன் சரக்கு கப்பல் ஒப்பந்தம் ரத்து
Share Post

உடன்பாடற்ற பிரெக்ஸிட்டின் பகுதியாக சர்ச்சைக்குரிய படகு ஒப்பந்தம் ஒன்று எந்த ஒப்பந்தமும் இல்லாத ஒரு கப்பலுடன் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கப்பல் சேவையை இயக்காத Seaborne சரக்கு கப்பலுடன் 13.8 மில்லியன் ஸ்ரேலிங்க பவுண்கள் நிதி முதலீட்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டமைக்கு அமைச்சர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்

இந்தநிலையில், நிறுவனத்தின் அயர்லாந்து ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் போக்குவரத்துத் திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்திருந்ததாக போக்குவரத்துத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தத்துக்கு பதிலாக மற்றொரு நிறுவனத்தை ஏற்பாடு செய்வதற்கான "முன்னேற்ற பேச்சுவார்த்தைகளில்" அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.