Home » உலகச் செய்திகள் » எட்மன்டனிற்கு கடும் குளிர் எச்சரிக்கை

எட்மன்டனிற்கு கடும் குளிர் எச்சரிக்கை

கனடாவின் எட்மன்டனில் கடும் குளிரான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran12 Feb 2019 3:58 PM GMT
எட்மன்டனிற்கு கடும் குளிர் எச்சரிக்கை
Share Post

கனடாவின் எட்மன்டனில் கடும் குளிரான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) முதல் எதிர்வரும் சில தினங்களுக்கு தொடர்ந்தும் குளிர்காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணமாக பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கனடிய காலநிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இன்றைய தினம் எட்மன்டனில் -23.3 C வெப்பநிலை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குளிர்காற்று 9 km/h வேகத்தில் வீசிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.