Home » உலகச் செய்திகள் » பிரித்தானிய பிரதமர் மற்றுமொரு தோல்வியை இன்று சந்திக்க நேரிடுமா?

பிரித்தானிய பிரதமர் மற்றுமொரு தோல்வியை இன்று சந்திக்க நேரிடுமா?

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறும் பிரெக்ஸிற் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பின் போது பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தோல்வியடையக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

👤 Sivasankaran14 Feb 2019 3:59 PM GMT
பிரித்தானிய பிரதமர் மற்றுமொரு தோல்வியை இன்று சந்திக்க நேரிடுமா?
Share Post

கொன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் சிலர் பிரதமரின் பிரெக்ஸிற் திட்டத்தினை ஆதரிப்பதற்கு மறுப்பு தெரிவித்து வரும் காரணத்தால் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறும் பிரெக்ஸிற் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பின் போது பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தோல்வியடையக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின் இந்த தோல்வி, மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெறமுடியுமென ஐரோப்பிய ஒன்றியத்திடம் அவர் அளித்துள்ள உறுதிமொழியை குறைமதிப்பிற்கு உள்ளாக்குமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்பை அகற்றுவதற்கான பிரதமரின் முயற்சி பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளில் பிரித்தானியாவின் நிலையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்பதன் காரணமாக கொன்சர்வேட்டிவ் கட்சி கட்சி உறுப்பினர்கள் பிரதமரின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தவறான சமிக்ஞையை அனுப்பும் செயலாக அமையுமெனவும் இந்த விவாதம் ஐரோப்பிய ஒன்றியத்தால் மிகத்துல்லியமாக கவனிக்கப்படுமெனவும் வர்த்தக அமைச்சர் லியம் பொக்ஸ் எச்சரித்துள்ளார்.