Home » உலகச் செய்திகள் » பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து

பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து

மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கு முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது.

👤 Sivasankaran15 Feb 2019 1:29 PM GMT
பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து
Share Post

இந்தியாவின் எதிரிநாடாக இருந்தாலும் அண்டைநாடாக இருக்கும் பாகிஸ்தானுக்கு 'மிகவும் முக்கியத்துவமான நாடு' என்ற சிறப்பு தகுதியை இந்திய அரசு கடந்த 1996-ம் ஆண்டு அளித்தது. இதன் மூலம் பாகிஸ்தான் - இந்தியா இடையே தங்குதடையற்ற வகையில் வர்த்தகம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மீது நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதல் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி ஆகியோர் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.

உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜெட்லி, 'மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கு முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது' தெரிவித்தார்.