Home » உலகச் செய்திகள் » இங்கிலாந்திலுள்ள பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

இங்கிலாந்திலுள்ள பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

காலநிலை மாற்றத்தின் மீதான உலகளாவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இங்கிலாந்திலுள்ள பாடசாலை மாணவர்கள்...

👤 Sivasankaran15 Feb 2019 6:27 PM GMT
இங்கிலாந்திலுள்ள பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Share Post

காலநிலை மாற்றத்தின் மீதான உலகளாவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இங்கிலாந்திலுள்ள பாடசாலை மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

காலநிலை மாற்றம் தொடர்பாக அவசரநிலையை பிரகடனப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி நாடு முழுவதிலுமுள்ள மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேற்றம் செய்துள்ளனர்.

ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் "Save our planet" என கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவது அறுபதுக்கும் மேற்பட்ட நகரங்களில் இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இங்கிலாந்து மாணவர் காலநிலை நெட்வேர்க்கால் பின்வரும் நான்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன;

  1. காலநிலை மாற்றம் தொடர்பாக அவசரநிலையை பிரகடனப்படுத்தப்படவேண்டும்.
  2. தற்போதைய சூழ்நிலையின் தீவிரம் குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும்.
  3. சுற்றுச்சூழல் நெருக்கடி குறித்து தேசிய பாடத்திட்டத்தில் இணைக்கவேண்டும்.

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பாக முடிவெடுப்பதில் இளையோருக்கு வாய்ப்பளிப்பதற்காக வாக்களிக்கும் வயது 16 ஆக குறைக்கப்பட வேண்டும்.

இன்று இங்கிலாந்தில் நடைபெற்ற இப்போராட்டங்கள் Schools 4 Climate Action எனும் பரந்த உலகளாவிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.

பரிஸ் காலநிலை ஒப்பந்தத்தை சுவீடன் அரசாங்கம் பின்பற்றவில்லை என குற்றம்சாட்டி கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் சுவீடனை சேர்ந்த கிரேடா துன்பெர்க் எனும் 15 மாணவியால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பெல்ஜியம், ஜேர்மனி, சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.