Home » உலகச் செய்திகள் » விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த விமானி

விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த விமானி

ரொறன்ரோவின் பில்லி பிஷப் விமான நிலையத்தில் நேற்று(சனிக்கிழமை) இந்த விபத்து நடந்துள்ளது.

👤 Sivasankaran17 Feb 2019 3:25 PM GMT
விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த விமானி
Share Post

கனடா, ரொறன்ரோவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

ரொறன்ரோவின் பில்லி பிஷப் விமான நிலையத்தில் நேற்று(சனிக்கிழமை) இந்த விபத்து நடந்துள்ளது.இந்த விபத்து காரணமாக குறித்த விமான நிலையத்தில் நேற்று மாலை சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

இந்த விபத்தில் விமானி காயமடைந்த நிலையில், சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக விமான சேவை நிறுவனம் விசாரணைகளை நடத்தி வருகின்றது.