Home » உலகச் செய்திகள் » வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள சுவிஸ் அரசு

வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள சுவிஸ் அரசு

இணைய திருடர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, இணையத்தில் பதிவு செய்து கொண்டு, சுவிஸ் மின்னணு வாக்களிப்பு அமைப்புக்குள் நுழைய முயற்சி செய்யலாம்.

👤 Sivasankaran17 Feb 2019 4:59 PM GMT
வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள சுவிஸ் அரசு
Share Post

மின்னணு வாக்களிப்பு அமைப்பிலுள்ள குறைபாடுகளை கண்டுபிடிக்கும் இணைய திருடர்களுக்கு பரிசு வழங்கவுள்ளதாக சுவிஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இணைய திருடர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, இணையத்தில் பதிவு செய்து கொண்டு, சுவிஸ் மின்னணு வாக்களிப்பு அமைப்புக்குள் நுழைய முயற்சி செய்யலாம்.

ஃபெடரல் அரசாங்கம் காகித முறை வாக்கெடுப்பிலிருந்து மின்னணு முறைக்கு மாறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்காக 250,000 சுவிஸ் ஃப்ராங்குகள் முதலீடு செய்யவுள்ளது.

ஒரு இணைய திருடரால், தான் கண்டுபிடிக்கப்படாமலே மின்னணு வாக்கெடுப்பு அமைப்பிற்குள் நுழைய முடிந்தால், அவர்களுக்கு 50,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் அரசாங்கத்தின் குறித்த அறிவிப்பினால் இணைய திருடர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள்.