Home » உலகச் செய்திகள் » முதல்வரை காகம் என்று டுவிட்டரில் பதிவிட்ட கிரண்பேடி

முதல்வரை காகம் என்று டுவிட்டரில் பதிவிட்ட கிரண்பேடி

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போராட்டம் நடத்தி வரும் நிலையில், தர்ணாவும் ஒரு யோகாதான் என்றும், காக்கையும் யோகா செய்வதாக கிரண்பேடி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

👤 Sivasankaran18 Feb 2019 4:20 PM GMT
முதல்வரை காகம் என்று டுவிட்டரில் பதிவிட்ட கிரண்பேடி
Share Post

கவர்னர் மாளிகை முன்பு கருப்புச் சட்டை அணிந்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போராட்டம் நடத்தி வரும் நிலையில், தர்ணாவும் ஒரு யோகாதான் என்றும், காக்கையும் யோகா செய்வதாக கிரண்பேடி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 8.30 மணியளவில், காக்கை யோகா என்ற பெயரில் இரு காக்கைகள் அமர்ந்திருப்பது போல படம் ஒன்றை தமது டுவிட்டர் பக்கத்தில் கிரண்பேடி வெளியிட்டிருந்தார். அதில் யோகா என்பது சர்வமயம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு மணி நேரம் கழித்து அதே படத்தை பதிவிட்டு, தர்ணா என்பது யோகா ஆகுமா என செய்தியாளர் ஒருவர் தம்மிடம் கேள்வி எழுப்பியதாக அவர் பதிவிட்டிருந்தார். அதற்கு, தர்ணாவும் யோகாதான் . என்ன நோக்கத்திற்காக, எந்த ஆசனத்தில் அமர்ந்து, என்ன சத்தம் எழுப்புகிறோம் என்பதைப் பொறுத்தது என்று தாம் பதிலளித்ததாக கிரண்பேடி பதிவிட்டிருந்தார்.

கிரண்பேடி, நாராயணசாமியின் போராட்டத்தை கிண்டலடிப்பதாகவும், காக்கை எனக் கூறியிருப்பது நிறத்தை குறிப்பிட்டு அவமதிக்கும் செயல் என்றும் சர்ச்சைகள் உருவாகியுள்ளன.