Home » உலகச் செய்திகள் » பிரெக்ஸிற் தொடர்பான எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை: பிரான்ஸ்

பிரெக்ஸிற் தொடர்பான எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை: பிரான்ஸ்

எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை.

👤 Sivasankaran18 Feb 2019 4:45 PM GMT
பிரெக்ஸிற் தொடர்பான எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை: பிரான்ஸ்
Share Post

பிரெக்ஸிற் குறித்த முட்டுக்கட்டைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ஐரிஷ் எல்லை தொடர்பாக சலுகைகளை வழங்குவதற்கு பிரான்ஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாக பிரித்தானிய ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக்கு பிரெஞ்சு அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடே பிரான்சின் நிலைப்பாடு எனவும் பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீள்பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கு தாம் ஆதரவு தெரிவிக்கவில்லையெனவும் பிரித்தானிய ஊடகத்தின் செய்தி பொய்யானது எனவும் பிரெஞ்சு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.