Home » உலகச் செய்திகள் » கியூபெக்கில் தீ விபத்து – மலர்கள் எரிந்து நாசம்

கியூபெக்கில் தீ விபத்து – மலர்கள் எரிந்து நாசம்

வெளிநாடுகளுக்கு மலர்களை ஏற்றுமதி செய்யும் நிலையம் ஒன்றிலேயே இன்று (புதன்கிழமை) காலை இந்த தீ பரவல்...

👤 Sivasankaran20 Feb 2019 5:12 PM GMT
கியூபெக்கில் தீ விபத்து – மலர்கள் எரிந்து நாசம்
Share Post

வெளிநாடுகளுக்கு மலர்களை ஏற்றுமதி செய்யும் நிலையம் ஒன்றிலேயே இன்று (புதன்கிழமை) காலை இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கடும் போராட்டத்திற்கு மத்தியில் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ பரவல் ஏற்பட்டமைக்கான காரணமாக இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், இதன்போது ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

குறித்த தீ பரவல் நாசகார சம்பவமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, தீ பரவல் ஏற்பட்ட வெளிநாடுகளுக்கு மலர்களை ஏற்றுமதி செய்யும் நிலையத்திலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.