Home » உலகச் செய்திகள் » சுவிற்சர்லாந்தில் பனிச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

சுவிற்சர்லாந்தில் பனிச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

உயிரிழந்தவர் 34 வயதுடைய பிரான்ஸ் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுவிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

👤 Sivasankaran20 Feb 2019 5:22 PM GMT
சுவிற்சர்லாந்தில் பனிச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு
Share Post

சுவிற்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா நகராட்சியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ச்சியாக சிகிச்சைபெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர் 34 வயதுடைய பிரான்ஸ் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுவிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பனிச்சரிவில் சிக்கியவர்களைத் தேடி நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு முழுவதும் எட்டு ஹெலிகொப்டர்கள் மற்றும் 12 மோப்ப நாய்களுடன் 240இற்கும் அதிகமான பொலிஸார், மீட்பு பணியாளர்கள், படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மீட்பு பணிகள் இன்றும் தொடர்ந்த நிலையில், எவரும் பனிச்சரிவிற்குள் சிக்கி காணாமல் போகவில்லை என அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

குறித்த பகுதியில் பனிச்சரிவு ஏற்படுவது அசாதாரணமான நிகழ்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது.