Home » உலகச் செய்திகள் » லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டம் மார்ச் மாதத்தில்...

லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டம் மார்ச் மாதத்தில்...

மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரவு செலவுத் திட்த்தை முன்வைக்கவுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் பில் மோர்னியோ தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran22 Feb 2019 5:35 PM GMT
லிபரல் அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டம் மார்ச் மாதத்தில்...
Share Post

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்தின் தேர்தலுக்கு முந்தைய மத்திய வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடப்படவுள்ளது.

மார்ச் மாதம் 19 ஆம் திகதி வரவு செலவுத் திட்த்தை முன்வைக்கவுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் பில் மோர்னியோ தெரிவித்துள்ளார். லிபரல் அரசாங்கம் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த நிலையில், இதுவரை மூன்று வரவு செலவுத் திட்டங்களை முன்வைத்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கனேடிய மத்திய பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த அரசாங்கத்தின் நான்காவது வரவு செலவுத் திட்டமாகவும், தேர்தலுக்கு முந்தைய பாதீடாகவும் இது அமையவுள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்நாட்டிலேயே பொருட்களை கட்டுப்படியான விலையில் மக்கள் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.