Home » உலகச் செய்திகள் » அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுத் தொடர்பாக ஐரோப்பிய அமைச்சர்கள் கலந்துரையாடல்

அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுத் தொடர்பாக ஐரோப்பிய அமைச்சர்கள் கலந்துரையாடல்

பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஒப்புதலை ஐரோப்பிய ஆணையம் கோரியுள்ளது.

👤 Sivasankaran22 Feb 2019 5:42 PM GMT
அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுத் தொடர்பாக ஐரோப்பிய அமைச்சர்கள் கலந்துரையாடல்
Share Post

அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது தொடர்பாக ஐரோப்பிய அமைச்சர்கள் விவாதிக்கவுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவுடன் எப்போது, எவ்வாறு பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது என்பது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) விவாதிக்கப்படவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உடன்பாடொன்றை எட்டுவதற்கு முடியாத பட்சத்தில் ஐரோப்பிய கார் இறக்குமதிகளின் மீது வரிவிதிப்புகளை மேற்கொள்ள நேரிடும் என அமெரிக்கா எச்சரித்திருந்த நிலையிலேயே இப்பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், முறையான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஒப்புதலை ஐரோப்பிய ஆணையம் கோரியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்புடனான விவாதத்திற்கு பிரான்ஸ் தயங்கி வருகின்ற நிலையில், பேச்சுவார்த்தையை வெகுவிரைவில் ஆரம்பிக்கத் தயாராகவிருப்பதாக ஜெர்மன் தெரிவித்துள்ளது.