Home » உலகச் செய்திகள் » தென்கொரியாவில் நடந்த விழாவில் இந்தியாவின் பிரதமர் மோடிக்கு அமைதி விருது

தென்கொரியாவில் நடந்த விழாவில் இந்தியாவின் பிரதமர் மோடிக்கு அமைதி விருது

விருதுடன் வழங்கப்பட்ட 2 லட்சம் டாலரை (சுமார் ரூ.1½ கோடி) கங்கை நதி தூய்மை திட்டத்துக்கு வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

👤 Sivasankaran23 Feb 2019 12:58 PM GMT
தென்கொரியாவில் நடந்த விழாவில் இந்தியாவின் பிரதமர் மோடிக்கு அமைதி விருது
Share Post

துடிப்பான கொள்கைகள் மூலம் பிராந்திய மற்றும் சர்வதேச அமைதிக்கு பங்களிப்பு செய்தமைக்காகவும், உள்நாடு மற்றும் சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் சிறப்பான பங்காற்றியமைக்காகவும் பிரதமர் மோடிக்கு 2018-ம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருது கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது.

2 நாள் பயணமாக அவர் தென்கொரியா சென்றிருந்த நிலையில் இந்த விருது நேற்று அவருக்கு வழங்கப்பட்டது. தலைநகர் சியோலில் நடந்த வண்ணமிகு எழில் விழாவில் சியோல் அமைதி விருது அறக்கட்டளையினர், இந்த விருதை மோடிக்கு வழங்கினர். அப்போது அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான ஆவணப்படம் ஒன்றும் அங்கே ஒளிபரப்பப்பட்டது.

விருதை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, இது தனக்கானது மட்டுமல்ல எனவும், ஒட்டுமொத்த இந்தியாவுக்கானது என்றும் கூறினார். காந்தியடிகளின் 150-வது பிறந்த ஆண்டை கொண்டாடி வரும் வேளையில், இந்த விருதை வழங்கி கவுரப்படுத்தியதற்காக விருதுக்குழுவுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக்கொண்டார்.

இந்த விருதுடன் வழங்கப்பட்ட 2 லட்சம் டாலரை (சுமார் ரூ.1½ கோடி) கங்கை நதி தூய்மை திட்டத்துக்கு வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.