Home » உலகச் செய்திகள் » ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிரியாவிலிருந்து வெளியேற்றம்

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிரியாவிலிருந்து வெளியேற்றம்

சோதனைகளின் பின்னர் பல ஆண்களும் வெளியேற்றப்பட்டனர் என சிரிய ஜனநாயகப் படையின் செய்தித் தொடர்பாளர் முஸ்தபா பாலி கூறினார்.

👤 Sivasankaran23 Feb 2019 3:55 PM GMT
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிரியாவிலிருந்து வெளியேற்றம்
Share Post

சிரியாவில் இருந்து இறுதியாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றும் முயற்சியில் குர்திஷ் தலைமையிலான படைகள் ஈடுபட்டுள்ளன.

அந்தவகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) சிரிய ஜனநாயகப் படைகளோடு சேர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு, பாஹோஸ் (Baghouz) பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதில் கிட்டத்தட்ட 7,000 பொதுமக்கள் வெள்ளிக்கிழமை வெளியேற்றப்பட்டனர் என்றும் அதில் சோதனைகளின் பின்னர் பல ஆண்களும் வெளியேற்றப்பட்டனர் என சிரிய ஜனநாயகப் படையின் செய்தித் தொடர்பாளர் முஸ்தபா பாலி கூறினார்.

கடந்த சில வாரங்களாக 20,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாஹோஸ் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சிரிய ஜனநாயகப் படையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.