Home » உலகச் செய்திகள் » சுற்றுச்சூழல் திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை

சுற்றுச்சூழல் திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை

இன்றிரவு வெப்பநிலை மறை 7 பாகை செல்சியஸ் குறைந்த நிலைக்குச் செல்லலாமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

👤 Sivasankaran24 Feb 2019 5:25 PM GMT
சுற்றுச்சூழல் திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை
Share Post

கனடாவில், ரொறொன்ரோ மாகாணத்தில் மணிக்கு 90 தொடக்கம் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுமென சுற்றுச்சூழல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

பலத்த காற்று வீசி வருவதால் சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு ஒன்ராறியோவில் காலநிலை தீவிரமடைந்துள்ளது. பல இடங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதோடு, நாளை காலை வரை நீடிக்கலாம் என சுற்றுச்சூழல் திணைக்களம் கூறியுள்ளது.

மேலும், இன்றிரவு வெப்பநிலை மறை 7 பாகை செல்சியஸ் குறைந்த நிலைக்குச் செல்லலாமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரவு நேர வாகன பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும், மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.