Home » உலகச் செய்திகள் » மாணவர்களை எதிர்காலத்திற்கேற்றவாற தயார்படுத்துவதில் ஒன்றாரியோ பின்னடைவு

மாணவர்களை எதிர்காலத்திற்கேற்றவாற தயார்படுத்துவதில் ஒன்றாரியோ பின்னடைவு

உயர்நிலைப் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகள் கிடைப்பதில்லை

👤 Sivasankaran28 Feb 2019 2:29 PM GMT
மாணவர்களை எதிர்காலத்திற்கேற்றவாற தயார்படுத்துவதில் ஒன்றாரியோ பின்னடைவு
Share Post

ஒன்ராறியோ மாகாண பாடசாலைகள் மாணவர்களை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு தயார்படுத்துவதில் பின்னடைவைக் கொண்டிருக்கக்கூடும் என்று, கல்வி தொடர்பில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட சமீபத்திய ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

கல்விக்கான 'வழித்தடங்களும் வழித் தடைகளும்: வாழ்க்கை திட்டமிடல் மற்றும் தொழில் – ஒன்ராறியோ பாடசாலைகளுக்கான வழிகாட்டல்' என்ற பெயரில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக ஒன்ராறியோ பாடசாலைகளுக்கான வழிகாட்டி ஆலோசகர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒன்ராறியோவில் 23 சதவீத ஆரம்பப் பாடசாலைகளில் மட்டுமே வழிகாட்டி ஆலோசகர்கள் உள்ளதாகவும், அவர்களில் அநேகர் பகுதி நேரமாகவே கடமையாற்றுவோர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவின் 1,254 கத்தோலிக்க மற்றும் அரச பாடசாலைகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் பிரகாரம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில் இடைநிலைப் பாடசாலைகளில் இருந்து உயர்நிலைப் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகள் கிடைப்பதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.