Home » உலகச் செய்திகள் » அதிமுக கூட்டணியில் இணைகிறார் விஜயகாந்த்

அதிமுக கூட்டணியில் இணைகிறார் விஜயகாந்த்

தே.மு.தி.க.வுக்கு 5 பாராளுமன்ற தொகுதிகளும், 1 மேல்-சபை சீட்டும் தருவதாக அ.தி.மு.க. தற்போது கூறி உள்ளது.

👤 Sivasankaran1 March 2019 6:58 AM GMT
அதிமுக கூட்டணியில் இணைகிறார் விஜயகாந்த்
Share Post

பாராளுமன்ற தேர்தலுக்காக தற்போது கட்சிகள் கூட்டணி அமைப்பதில் பெரும்பாடுபட்டு வருகின்றன. முக்கிய கட்சியான அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் மற்றொரு கூட்டணியும் அமைந்துள்ளது.

கூட்டணி ஒப்பந்தம் வரும் 3ம் திகதி கையெழுத்தாகும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

தே.மு.தி.க. கட்சி அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளிடமும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. தே.மு.தி.க.வுக்கு 5 பாராளுமன்ற தொகுதிகளும், 1 மேல்-சபை சீட்டும் தருவதாக அ.தி.மு.க. தற்போது கூறி உள்ளது. இந்த கூட்டணியில் சேர்ந்தால் வெற்றி பெறுவது நிச்சயம் என்றும் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷிடம் அ.திமு.க. மூத்த நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்க தி.மு.க அதிகம் முயற்சித்தது. ஆனால் பேச்சுவார்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.