Home » உலகச் செய்திகள் » பாகிஸ்தானில் சிறைப்பட்ட இந்திய விமானி விடுவிக்கப்பட்டார்

பாகிஸ்தானில் சிறைப்பட்ட இந்திய விமானி விடுவிக்கப்பட்டார்

பாகிஸ்தான் அதிகாரிகள் முறைப்படி இந்தியாவிடம் மாலை ஐந்தரை மணியளவில் ஒப்படைத்தனர்.

👤 Sivasankaran1 March 2019 2:03 PM GMT
பாகிஸ்தானில் சிறைப்பட்ட இந்திய விமானி விடுவிக்கப்பட்டார்
Share Post

தமிழ்நாட்டைச் சேர்ந்த விமானி அபினந்தன் போர் கைதியாக பாகிஸ்தானிடம் சிக்கினார். இதனால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டது.

அனைத்து நாடுகளும் விமானி அபினந்தனை உடனடியாக பாகிஸ்தான் விடுவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் நேற்று பாராளுமன்றத்தில் பேசிய இம்ரான் கான் "அபினந்தன் நாளை விடுவிக்கப்படுவார்" என்று அறிவிப்பு வெளியிட்டார்.

இதற்கிடையே, இன்று காலை பாகிஸ்தானில் இருந்து அபினந்தன் விடுவிக்கப்பட்டார். இன்று மதியம் அவர் ராவல்பிண்டியில் இருந்து லாகூர் நகருக்கு பலத்த பாதுகாப்புடன் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பாகிஸ்தான் அதிகாரிகள் வாகனங்கள் புடைசூழ வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார்.

இன்று மாலை வாகா எல்லை வந்தடைந்த அபினந்தனை இந்திய மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். பின்னர் பாகிஸ்தான் அதிகாரிகள் முறைப்படி இந்தியாவிடம் மாலை ஐந்தரை மணியளவில் ஒப்படைத்தனர். பொதுமக்கள் அனைவரும் அபினந்தன் விடுதலை பெற்று வர வேண்டும் மிக ஆர்வமாக மக்கள் கூடியிருந்தனர். அபிநந்தனை வரவேற்க ஏராளமான பொது மக்கள் வாகா அட்டாரி எல்லையில் கூடினர்.