Home » உலகச் செய்திகள் » கனடிய பிரதமரை குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சி தலைவர்

கனடிய பிரதமரை குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சி தலைவர்

வில்சன் ராய்போல்டின் தீர்மானத்தை, பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே, உதாசீனம் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், அன்ட்றூ ஷீயர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

👤 Sivasankaran2 March 2019 1:29 PM GMT
கனடிய பிரதமரை குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சி தலைவர்
Share Post

கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, நாட்டை ஆட்சி செய்யும் தார்மீகப் பொறுப்பினை இழந்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அன்ட்றூ ஷீயர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எஸ்.என்.சீ லவாலின் விவகாரம் தொடர்பில் சட்ட மா அதிபர், நீதியமைச்சராக கடமையாற்றிய ஜோடி வில்சன் ராய்போல்டின் தீர்மானத்தை, பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே, உதாசீனம் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், அன்ட்றூ ஷீயர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். அத்துடன், பிரதமர் தனது பதவியை விட்டு விலகவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் தொழில்வாண்மையுடனும், கிரமமான முறையிலும் செயற்பட்டுள்ளதாகவும் தவறிழைக்கவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.