Home » உலகச் செய்திகள் » ஊடகவியலாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஸ்ரீதரன்

ஊடகவியலாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஸ்ரீதரன்

ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கோருவதாக தெரிவித்துள்ளார்

👤 Sivasankaran2 March 2019 4:06 PM GMT
ஊடகவியலாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஸ்ரீதரன்
Share Post

கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் போராட்டத்தின் போது ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட விவகாரத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் மன்னிப்பு கோரியுள்ளார்.

கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தில் தமது தரப்பில் தவறு இடம்பெற்றுள்ளமையை ஏற்றுக்கொண்டு அவர் பகிரங்க மன்னிப்பை தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கோருவதாக தெரிவித்துள்ளார்.