Home » உலகச் செய்திகள் » வின்னிபெக்கில் கடுமையான பனிப்பொழிவு

வின்னிபெக்கில் கடுமையான பனிப்பொழிவு

மின் விநியோக தடைகளும், பல இடங்களில் வாகன விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.

👤 Sivasankaran3 March 2019 5:18 PM GMT
வின்னிபெக்கில் கடுமையான பனிப்பொழிவு
Share Post

வின்னிபெக்கில் கடும் பனிப்பொழிவால் பல இடங்களில் மின் விநியோக தடைகளும், பல இடங்களில் வாகன விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.

நாளை(திங்கட்கிழமை) பலத்த பனிப்பொழிவு காணப்படும் என கனடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கட்டடங்களின் கூரைகள், ஜன்னல்கள் போன்றவற்றிற்கும் பாதிப்பு ஏற்படும் எனவும், மரங்கள், கம்பங்கள் முறிந்து வீழ்வதால் மின்விநியோகம் தடைப்படலாம் எனவும் அறிவிப்பி வெளியிடப்பட்டுள்ளது.