Home » உலகச் செய்திகள் » சுவிட்சர்லாந்தில் இளைஞர்களுக்கு புதிய பயண அட்டை அறிமுகம்

சுவிட்சர்லாந்தில் இளைஞர்களுக்கு புதிய பயண அட்டை அறிமுகம்

நடைமுறையில் இருந்த Gleis/Voie 7 பயண அட்டைக்கு பதிலாக, seven25 என்னும் புதிய பயண அட்டை பயன்பாட்டுக்கு வர உள்ளது.

👤 Sivasankaran3 March 2019 5:47 PM GMT
சுவிட்சர்லாந்தில் இளைஞர்களுக்கு புதிய பயண அட்டை அறிமுகம்
Share Post

சுவிட்சர்லாந்தில் இளைஞர்களுக்கான புதிய பயண அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே மாதம் முதல் இந்த பயண அட்டைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த Gleis/Voie 7 பயண அட்டைக்கு பதிலாக, seven25 என்னும் புதிய பயண அட்டை பயன்பாட்டுக்கு வர உள்ளது.

இந்த seven25 பயண அட்டையும், 16 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், சுவிஸ் பொதுப்போக்குவரத்துக்களில் இரண்டாம் வகுப்பில் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆண்டு கட்டணத்தில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அட்டையைக் கொண்டு பயணிகள் ஒரே அட்டை மூலமாகவே பேருந்து சேவைகளையும் பயன்படுத்த முடியும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.