Home » உலகச் செய்திகள் » போதைப்பொருளினால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

போதைப்பொருளினால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

இதுவரையான காலப்பகுதியில் 993 பேர் போதைப்பொருள் பாவனை காரணமாக உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

👤 Sivasankaran4 March 2019 4:54 PM GMT
போதைப்பொருளினால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
Share Post

கனடாவில் போதைப்பொருள் பாவனையினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக கனடிய ஆய்வு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 993 பேர் போதைப்பொருள் பாவனை காரணமாக உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், இதுவரையான காலப்பகுதியில் கனடாவில் சுமார் 8 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 94 சதவீதமானவர்கள் விபத்துக்களினால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த விபத்துக்கள் அதிகரித்தற்கு போதைப்பொருள் பாவனையே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.