Home » உலகச் செய்திகள் » சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

மதுபானத்திற்கான உற்பத்தி வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran5 March 2019 3:43 PM GMT
சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு
Share Post

இலங்கையில் இன்று பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாயால் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிகரட்டுகள் மீதான உற்பத்தித் தீர்வை 60 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட கூறுகளுக்கு 2019 மார்ச் 06 ஆம் திகதியிலிருந்து 12 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட உள்ளது.

இதனால் ஒவ்வொரு தனிக்கூருக்குமான விலையானது சராசரியாக ரூபா 5 இனால் அதிகரிக்கப்பட உள்ளது. அத்துடன் 2019 ஜூன் 01 ஆம் திகதியிலிருந்து சிகரட்டுகள் உற்பத்தி மீதான தேச கட்டுமான வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மதுபானத்திற்கான உற்பத்தி வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

750 மில்லி லீட்டர் வன் மதுபான போத்தல் ஒன்றிற்கான உற்பத்தி வரி 63 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 330 மில்லி லீட்டர் பியர் போத்தல் ஒன்றிற்கான உற்பத்தி வரி 9 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.