Home » உலகச் செய்திகள் » கனடிய அமைச்சர் ஜேன் பில்போட் ராஜினாமா

கனடிய அமைச்சர் ஜேன் பில்போட் ராஜினாமா

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பொறுப்பற்ற தன்மை காணப்படுவதாகவும் ஜேன் பில்போட் குற்றம் சாட்டியுள்ளார்.

👤 Sivasankaran5 March 2019 5:10 PM GMT
கனடிய அமைச்சர் ஜேன் பில்போட் ராஜினாமா
Share Post

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் ட்ரூடோ அரசாங்கம் தாமதம் காட்டுவதாக தெரிவித்து லிபரல் கட்சியின் பெண் அமைச்சர் ஜேன் பில்போட் பதவி விலகியுள்ளார்.

அரசாங்கத்தின் அண்மைகால செயற்பாடுகள் அரசியல் அமைப்புக்கு முரணாக காணப்படுவதாகவும், தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பொறுப்பற்ற தன்மை காணப்படுவதாகவும் ஜேன் பில்போட் குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக புதிய சட்டமா அதிபர் விவகாரத்தில் அரசாங்கம் நேர்மையான வழிமுறைகளை கடைபிடிக்கவில்லை எனவும், அதனால் தான் அரசாங்கத்தின்மீது நம்பிக்கை இழந்து காணப்படுவதாகவும் அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவரது பதவி விலகல் பிரதமரின் அமைச்சரவைக்கு பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.