Home » உலகச் செய்திகள் » இந்துக்களுக்கு எதிராக கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் அமைச்சர் பதவி நீக்கம்

இந்துக்களுக்கு எதிராக கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் அமைச்சர் பதவி நீக்கம்

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் செய்தி மற்றும் கலாசார மந்திரியாக இருப்பவர் பையாசூல் ஹசன்சோகன். இவர் ...

👤 Sivasankaran5 March 2019 5:25 PM GMT
இந்துக்களுக்கு எதிராக கருத்து வெளியிட்ட பாகிஸ்தான் அமைச்சர் பதவி நீக்கம்
Share Post

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் செய்தி மற்றும் கலாசார மந்திரியாக இருப்பவர் பையாசூல் ஹசன்சோகன். இவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் பசுவின் மூத்திரத்தை குடித்து வாழ்பவர்கள். அவர்களை போல பாகிஸ்தானியர்கள் இல்லை.

பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு தனி கொடி இருக்கிறது. தனி அடையாளம் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கு அப்படி எந்த அடையாளமும் இல்லை. இந்தியாவில் இந்துக்கள் சிலை வழிபாடு செய்பவர்கள். நாங்கள் அப்படி சிலை வழிபாடு செய்வது இல்லை. நாங்கள் செய்யும் வழிபாட்டை இந்தியர்களால் செய்ய இயலாது என தெரிவித்திருந்தார்.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் மந்திரி இப்படி தகாத வார்த்தைகளை கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், உள்பட பல்வேறு கட்சி தலைவர்களும் மந்திரி சோகனின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் போர்க்கொடி உயர்த்தினர். பல சர்ச்சைகள் ஏற்பட்டதால், இந்துக்களை தரக்குறைவாக விமர்சித்த பையாசூல் ஹசன் சோகன் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.